திருகோணமலை நகர சபை தயமுயர்த்தப்படும்: கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாகம

0
420

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை நகர சபை மாநகர சபையாக மிக விரைவில் தயமுயர்த்தப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை நகரை அழகிய நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருவதாகவும் எனக்கு உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் என்ற வகையில் திருகோணமலையில் உள்ள அனைத்து வளங்களையும் பாதுகாப்பது எமது கடமையாகவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் திருகோணமலை முக்கிய கேந்திர நிலையமாக இயற்கையான மாவட்டமாக உள்ளது. எதிர்காலத்தில் இதனை அபிவிருத்தி செய்யவுள்ளேன் எனவும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபையின் புணரமைக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் இம்மாவட்டத்தில் காணப்படும் வளங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு யாருக்கும் இடமளிக்க மாட்டேன்.வளங்களை பாதுகாபப்து எமது கடமையாகும்.

இதனை பாதுகாப்பதற்காக அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதே வேளை திருகோணமலையில் வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையாகவும் சாந்தி சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY