கோழி வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயம்

0
157

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூரிலிருந்து விற்பனைக்காக இறைச்சிக் கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் எனுமிடத்தில் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் கை கால்கள் முறிந்த நிலையில் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாகனத்தில் இருந்து கோழிகளை இறக்கி விட்டு கல்முனையிலிருந்து ஏறாவூரை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கையில் சனிக்கிழமை இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின் கம்பத்துடன் லொறி மோதுண்டதில் அதன் சாரதிக்கு கை முறிந்துள்ளதோடு உதவியாருக்கு கால் முறிந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்த சாரதியும் உதவியாளரும் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

2

LEAVE A REPLY