திருகோணமலை நகர சபை மாநகர சபையாக மாற்றப்படலாம்:கிழக்கு ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம

0
89

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை நகர சபை மிக விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறலாம் 2002 ம் ஆண்டளவில் திருகோணமலை நகர சபையில் பெப்ரவரி மாதமளவில் கண்காட்சி ஒன்று நடைபெற்றது அப்போது நான் கைத்தொழில் அமைச்சராக இருந்தேன் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுனர் என்ற வகையில் திருகோணமலையில் உள்ள அனைத்து வளங்களை பாதுகாப்பது எமது கடமையாகவுள்ளது கிழக்கு மாகாணத்தின் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் திருகோணமலை முக்கிய கேந்திர நிலையமாக இயற்கையான மாவட்டமாக உள்ளது எதிர்காலத்தில் இதனை அபிவிருத்தி செய்யவுள்ளோம் என (2017 12 15) திருகோணமலை நகர சபையின் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்கள் திருகோணமலையை அழகிய நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் செய்து தருவதாகவும் பொருளாதாரத்தின் முக்கிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு இட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகிறது இம் மாவட்டத்தில் காணப்படும் வளங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு யாருக்கும் இடமளிக்க மாட்டேன் கிழக்கு மாகாண ஆளுனர் என்ற வகையில் இதனை கூறிக்கொள்கிறேன் வளங்களை பாதுகாப்பது எமது கடமையாகும் இதற்காக அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் இங்கு எம்மால் வழங்கப்படும் சேவைகள் சமமாகவும் நேர்மையாகவும் உயர்ந்த பட்ச சேவையாக வழங்கப்படுகிறது .இங்கு காணப்படும் வளங்கள் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பாக உள்ளது இவ்வாறான வளங்களை பாதுகாப்பது எமது கடமையாகவுள்ளது.எனவும் கிழக்கு மாகாண ஆளுனர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையில் வாழ்கின்ற சிங்களம்,தமிழ்,முஸ்லீம்கள் ஒற்றுமையாகவும் சாந்தி சமாதானத்துடன் வாழவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதும் தொடர்ந்தும் அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதிலும் மிகவும் சந்தோசமடைகிறேன்.எனவும் அவர் மேலும் கூறினார்.இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேயவர்தன,கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ்,மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம்,உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதாகரன் உட்பட திருகோணமலை நகர சபையின் செயலாளர் ஜே.விஷ்னு நகர சபை ஊழியர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY