ஒற்றுமைப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வி; தனித்தனியே போட்டி: காத்தான்குடி நகர சபை தேர்தல் கள நிலவரம்

0
450

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடவுள்ள மூன்று பிரதான கட்சிகளிடையே ஒரு இணக்கப்பாட்டுடனான ஒற்றுமையை ஏற்படுத்த காத்தான்குடியிலுள்ள புத்திஜீவிகள் அமைப்பொன்று எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

இவர்களின் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்த நிலையில் தனித் தனியே மூன்று கட்சிகளும் போட்டியிடவுள்ளன.

சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சார்ந்த அணியும், இரட்டைக் கொடி சின்னத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சி சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றினைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும் பிரதான அணிகளாக காத்தான்குடி நகர சபை தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என மக்கள் விடுதலை முன்னணியான ஜே.வி.பி மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கட்சியான சிரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர்

LEAVE A REPLY