வந்த காக்கை இருந்த காக்கையை விரட்டிய நிலைதான் அக்கரைப்பற்றில் நடந்தது

0
700

அக்கரைப்பற்று வரலாற்றில் அதாஉல்லாஹ்வின் சேவையை மக்கள் ஒரு போதும் மறக்கவோ வெறுக்கவோ ஒதுக்கவோ மாட்டார்கள்.

ஆனால் அதாஉல்லாஹ்வின் அரசியலில் அதாவுல்லாவின் வீட்டு நாய்க்குட்டியாக வளர்ந்ததுகள் அவர்போட்ட உணவின் (பதவியின்) அதிகரிப்பினால் மோகம் கொண்டு இன்னும் மேலுயர நினைத்த ஆசைகள் அவருடன் இருந்து விரண்டோடச் செய்தன.

பல அரசியல் தலைமைகளிடம் ஏன் ரிஷாத் அணியில் கூட ஒன்று சேர்க்குமாறு அன்று 2012 பலரின் மூலம் அழைத்தும் ரிஷாத் அணி ஏற்றுக்கொள்ளாதபோது, அக்கரைப்பற்றில் எதிர்பார்ப்புக்கொண்ட முஸ்லீம் காங்கிரசில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் பலரை பேசவைத்து அன்று 2012 பொத்துவிலுக்கு வந்த ஹக்கீமுடன் இணைந்த அதாஉல்லாவின் வீட்டு வளர்ப்பான அவருக்கு இடம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் குதூகலித்து எலி கொழுத்து பூனையை சண்டைக்கு அழைத்த நிலமையில் தனக்கு முழு நேரம், ஊட்டி வளர்த்த தலைவனின் மார்பில் பாயும் நோக்கில் மேடை மேடையாய் வசைபாடினார்.

அது மட்டுமல்லாது ஹக்கீமுக்கு மனதில் இன்னும் நினைவிருக்கலாம் அன்று புனித நோன்பு திறக்கும் நேரம் கஞ்சுப் பானைக்குள் அடாவடியாய் மண்ணைப்போட்டு கல்லால் அடித்து பல காங்கிரஸ் போராளிகளை காயப்படுத்தி அந்த கக்கிசப்பேர்வளியாக இருந்த அதாஉல்லாவின் வீட்டு வளர்ப்பான அவர் காங்கிரஸ் தலைவர் உட்பட போராளிகள் அனைவரையும் நடுவீதியில் குந்திக்கொண்டு நோன்பு திறக்கும் கேவலமான கைங்கரியத்தைச் செய்து காட்டியவர்தான் இன்று காங்கிரசின் அக்கரைப்பற்று சண்டியனாக கக்கிசப்படுத்துகிறார்.

இப்படியான பல கொலைக் காட்சிகளுடன் அன்று நடந்த ஒரு தேர்தலில் போலின்பூத்தில் இருந்த காங்கிரஸ் போராளியை கொலை செய்து கொலையாளி என்ற பெயரைக் கூட மறைத்தவர்கள் காங்கிரசின் அந்த போர்களங்களாக இருந்த கொலைக்களத்தில் தைரியமான ஒரு ஆண்மகனாக தன்னை வேனைக்கொண்டு வந்து கடத்தி அராஜகம் செய்தபோதும் தயங்காத ஹனீபா மதனி என்னும் ஒரு சிங்கம் முஸ்லீம் காங்கிரசுக்காக அன்றைய நிசார் ஹாஜியுடன் இணைந்து செயல்பட்டவரை கட்சியை விட்டு துரத்த முட்பட்டுள்ளனர்.

அதுமாத்திரமல்ல என் இறைவனுக்கு மட்டுமே நான் பயந்தவன் வேறு யாருக்கும் பயமில்லை என்பதனை அன்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகரசபையில் போட்டியிட்டு அச்சபையில் எதிர் கட்சித் தலைவராக இருந்தவர்தான் இந்த ஹனீபா மதனி. ஆனால் இன்று இப்படிக் கொலைக்களத்தில் தனி ஒருவன் என்ற தைரியத்தில் சாதனை படைத்த அவரை கட்சியில் சீரோவாக நினைத்த இந்த புதுவரவான அதாவுல்லா வீட்டு வளப்பானவர் தூக்கியெறிய ஹக்கீமிடம் இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லுகிறார். ஆனால் ஒன்று மட்டும் உண்மை எப்படித்தான் சொன்னாலும் ஹனீபா மதனியின் இடத்துக்கு வர நெடுங்காலம் எடுக்கும் இவருக்கு இருந்தாலும் இந்த நபரால் எதுவுமே முடியாது என்பதே அக்கரைப்பற்று மக்களின் நல்ல சிந்தனையாகவிருக்கிறது.

இந்த இடத்தில்தான் வந்த காக்கை இருந்த காக்கையை விரட்டிய கதை நினைவுக்கு வருகிறது. இத்தனை அட்டூழியங்களைக் கட்சிகு செய்து பல உயிர்களை சவமாக்கியவருக்கு ஹக்கீமும் பெரிய தண்டனை ஒன்று கொடுத்துவைத்திருந்தார். அதுதான் அவர் தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று ஊர் ஊராக குரைத்துத் திரிந்த மிகக் கேவலமான தண்டனை.

யோசிக்காதீர்கள் விரிவாகச் சொல்கிறேன்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை எந்தளவு மோசமாக தூற்றினாரோ அதன் போராளிகளை கொலையாக்கினாரோ அந்தளவு ஒவ்வொரு ஊருக்கும் அலைந்து திரிந்து கட்சியைபற்றியும் கட்சியின் நலவுகள் பற்றியும் கட்சிக்கான வெற்றி பற்றியும் மேடை மேடையாய் பிரச்சாரம் செய்யும் பெரும் தண்டனையைத்தான் ஹக்கீம் அவருக்கு வழங்கியிருந்தார். அவரும் இது நமக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அலைந்து திரிந்தார்.

இதனை கட்சியில் இருக்கும் பலரும் சிரித்துக்கொண்டு பேசியதை அவதானிக்க முடிந்தது.

ஆனால் ஹனீபா மதனி என்னும் இரட்டைப் பட்டதாரி சிறந்த ஆளுமை நாகரீக அரசியலை அறிமுகப் படுத்திய நல்லவர் பண்பான மனிதர் கேவலமான அரசியல் கலாச்சாரத்துக்கொ சோரம் போக அழைத்தும் செல்லாத காரணத்தால் அவரை வெட்ட நினைத்தவருக்கு பதிலடியாகவே நேற்று ரிஷாத்துடன் இணைந்து கொண்டார் என்பது தெரியவருகிறது.

எது எவ்வாறாகினும் அக்கரைப்பற்றில் அதாவுல்லாவை அசைக்க முடியாது என்பதனை நடக்கவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபை தெளிவாக எடுத்துக்காட்டும் என்பதனையும் கடந்த தேர்தலில் அக்கரைப்பற்று மாநகரம் எத்தனை வாக்குகளை வழங்கியது என்பதனையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் என்பதனையும் இனி ஒருகாலமும் இந்த அதாஉல்லாஹ் வீட்டு வளப்புக்குட்டிக்கு அரசியல் பூச்சியம் என்பதனை மக்கள் பாடமாகக் காட்டுவார்கள் என்பதனைப் புரிந்து கொள்வர்.

கடந்த 2012யில் நடந்த மாகான சபைத் தேர்தலில் அதாஉல்லாஹ்வுடன் சிலர் கொண்ட கோபம் காரணமாக அவரின் வளப்பில்வந்த அவருக்கு வாக்குகளைப் பரவலாகப்போட்டார்களே தவிர இவரை விரும்பி ஒருவரும் போடவில்லை.

ஆனால் மாகாண சபைக்கு அனுப்பிய இந்த மக்களுக்கு அதாவது சம்மந்துரை, கல்முனை, சாய்ந்த மருது, மருதமுனை, இறக்காமம், பொத்துவில்,அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், வரிப்பத்தான்சேனை,நிந்தவூர், மாளிகைக் காடு, மாவடிப்பள்ளி, அக்கரைப்பற்று இந்த ஊர்களுக்கு இவரால் செய்த சேவைகள் என்ன அல்லது யாராலும் ஏதும் சேவைகள் செய்ய சொன்னவரா என்று ஒவ்வொரு ஊர் மக்களும் நிதானமாக சிந்திக்க வேண்டும் இவரை நிறுத்தி வைத்து கேள்விகள் கேட்க வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விளையாட்டுக்கழகங்களுக்கும் 25000 பணம், கொடுத்தால் அல்லது விளையாட்டுக்காக வெற்றும் விக்கட்டும் பந்துகளும் கொடுத்தால் அத்துடன் வாழ்வாதாரம் என்று சட்டிபானைகள் கொடுத்தால் சேவை செய்தவர் பட்டியலில் வந்து விடலாமா யார் இப்படியான சுயநலவாதிகளை இனிமேலும் ஆதரிப்பது.

எனவே இவர் போன்ற அரசியல் வியாபாரிகளை விரட்டியடிக்கும் தேர்தல் இதிலிருந்து ஆரம்பம் என்று இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மீண்டும் வரும் இது தூய போராட்டம்.

LEAVE A REPLY