நெளசாத்தின் இணைவு சம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய வீழ்ச்சியை எடுத்துகாட்டுகின்றது. நாபீர் பெளண்டேசன்.

0
528
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

பெளண்டேசன் மறைமுகமாக முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவா.?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான நெளசாத் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கள் செய்திருப்பதானது அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு சம்மாந்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது என சமூக ஆர்வலரும், நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் நேற்று 16.12.2017 இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்… தங்கள் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 13000க்கும் அதிகமான வாக்கு வங்கியினை கொண்டுள்ளோம் என தெரிவிக்கும் அகில இலக்கை மக்கள் காங்கிரசானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நெளசாத்திடம் சரணடைய கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதையே அவதானிக்க கூடியதாக உள்ள அதே இடத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 13000க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளோம் என கூறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறை பிரதேச சபையினை நகர சபையாக கூட மாற்றித்தர முடியாதுள்ளது என்பது இங்கு மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

அது மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக களமிறங்க போகின்றோம் என கூறியவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பொது கூட்டமைப்பில் களமிறக்கப்பட்டிருப்பார்கள் என்றால்.? அது முஸ்லிம் காங்கிரசிற்கு பாரிய சவாலாக அமைந்திருக்கும். இந்த சவாலினை உடைத்து இவர்கள் தனித்தனியே களமிறங்குவதினால் அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை தொகுதியில் பாரிய வெற்றி அடைவதற்கு வழியமைக்கும் என்பதே எனது கருத்தாகும்.

இம் முறை நாபீர் பெளண்டேசனாது பிரதேச சபை தேர்தலில் களமிறங்குவதில்லை என்ற தீர்மாணத்தினை எடுத்துள்ளது. சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை பிரச்சனையாது முக்கிய பிரச்சனையாக கருதப்படுவதினால் பெளண்டேசன் இத்தேர்தலில் களமிறங்குவதில்லை என்ற தீர்மானத்தினை எடுத்துள்ளது. இருந்தும் அம்பாறையில் ஒரு புதிய கட்சியாக நல்லாட்சிக்கான தேதிய முன்னணி களமிறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாபீர் பெளண்டேசனும் அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து இத்தேர்தலில் களமிறங்க கூடிய வாய்ப்பு இருந்துக்கும் எனவும் தொடர்ந்து தனது கருத்தினை தெரிவித்தார் பொறியலாளர் உதுமான்கண்டு நாபீர்.
இவ்வாறு ஊடக சந்திப்பில் பல கேள்விகளுக்கு தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் நாபீர்… சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் நாபீர் பெளண்டேசன் களமிறங்காவிட்டாலும் பெளண்டேசனுடைய ஆதரவு இல்லாமல் எந்த கட்சியினாலும் ஆட்சி அமைக்க முடியாது என ஆணித்தரமாக தெரிவித்தார். அத்தோடு நாபீர் பெளண்டேசன் எந்த கட்சிக்கு தனது ஆதவினை வழங்கவுள்ளது.? எதற்காக வழங்கவுள்ளது.? என்பதனை இன்னும் சில தினங்களில் பகிரங்கமாக அறிவிக்கும் என தெரிவித்தா.

ஆனால் மறுபக்கத்திலே பல கேள்விகளுக்கு பதிலலித்த பொறியியலாளர் நாபீருடைய கருத்துக்களில் இருந்து பெளண்டேசனானது நடக்கவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவளிக்கும் என்பதனை மறைமுகமாக அறியக்கூடியதாக இருந்ததும் முக்கிய விடயமாகும்.

நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ தேர்தல் சம்பந்தமாக உதுமான்கண்டு நாபீர் தெரிவித்த கருத்துக்கள்:-

LEAVE A REPLY