மர்ஹும் எம். எச்.எம். அஷ்ரப் நினைவாக புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

0
199

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் பொறியியலாளர் இஸட். எம். தௌபீக் தலைமைல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவாக 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 5ஆம்தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் அதிவிசேட சித்திபெற்ற இலங்கை துறைமுக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸ் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம். ஏ. மண்டபத்தில் நேற்று (16)  மாலை இடம்பெற்றது.

நிகழ்வில் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஏ.எம். நஹியா பிரதம அதிதியாகவும் செரண்டிப் பிளவர் மில் பிரைவட் லிமிட்டட் பிரதம நிறைவேற்று அதிகாரி, முகம்மட் றியால் விசேட அதியாகவும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அதிதிகளுக்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் ஜப்பார் மௌலவியால் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபுக்காக துஆப் பிராத்தனை செய்யப்பட்டது. விழாவை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளரும் துறைமுக நிர்வாக அதிகாரியுமான கலீலுர் ரஹ்மான் தொகுத்து வழங்கியதோடு, இலங்கை துறைமுக அதிகாரசபை மஜ்லிஸ் பிரதிநிதிகள், மஜ்லிஸ் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2 (1) 4 (1) 5 (1) 7

LEAVE A REPLY