பொது மக்களின் முறைப்பாடுகளை திடீர் களவிஜயம் செய்து பார்வையிட்டார் கிண்ணியா நகர சபை செயலாளர்

0
166

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமாகிய என். எம். நௌபீஸ் தலைமையில், நிருவாக உத்தியோகத்தர் பாயிஸ், தொழிநுட்ப உத்தியோகத்தர் றாசித் ஆகியோர் கொண்ட குழு நேற்று (17) பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளில் இடம்பெற்ற முக்கிய குறைகளை ஆராய்வதற்காக சென்றிருந்தனர்.

அதனடிப்படையில் பெரியாத்துமுனை அரிப்புக்கட்டு சேதமடைந்திருப்பதனைப் பார்வையிட்டனர். அத்துடன் அதனை மேலும் சேதமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் மிக நீண்ட காலப்பிரச்சிணையான றஹ்மானியா துறையடி வடிகான் பார்வையிடப்பட்டதுடன் உடன் தொடர்பு கொண்டு தீர்வு வரும் வரை ஊழியர்களைக் கொண்டு நீர் வடிந்தோடக் கூடிய விதத்தில் தற்காலிகமாக செப்பனிடுவதென தீர்மாணிக்கப்பட்டது. பொது மக்களினால் பல முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே களவிஜயத்தினை மேற்கொண்டிருந்ததாகவும் செயலாளர் தெரிவித்தார்.

FB_IMG_1513534207063 FB_IMG_1513534211401

LEAVE A REPLY