இலங்கைத் தேயிலை மீது ரஷ்யா இறக்குமதித் தடை

0
165

இலங்கை தேயிலை சபையின் ரஷ்யாவிற்கான பிரதிநிதி மற்றும் அந்நாட்டின் உணவுத்தரம் தொடர்பில் ஆராயும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து நேற்றைய தினமும் கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்திகளுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இறக்குமதித் தடை விதிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக நேற்று (15) செய்திகள் வௌியாகின.

இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலையில் சிறிய வண்டு ஒன்று காணப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை மறுதினம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், இந்தத் தடையைத் தளர்த்துவதற்கான இணக்கம் எட்டப்படும் என இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

ரஷ்யாவின் தேயிலைத் தேவையில் 23 வீதத்தை இலங்கை நிவர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இலங்கை தேயிலையைக் கொள்வனவு செய்யும் பிரதான வௌிநாட்டு கொள்வனவாளராக ரஷ்யா காணப்படுகின்றது.

(News1st)

LEAVE A REPLY