மாணவர்களின் நலன் கருதி பிரத்தியேக வகுப்புகளை இடை நிருத்துங்கள்: காத்தான்குடி சம்மேளனம்

0
310

federation-logo1السالم عليكم ورحمة هللا وبركاته

அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கியமான அறிவித்தல்

அன்புடையீர், السالم عليكم ورحمة هللا وبركاته

2018ஆம் ஆண்டிற்கான புதிய பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பது தொடர்பாக…

2017ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் தற்போது முற்றுப் பெற்றுள்ளன. மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் 3ஆம் தவனைப் பரீட்சையை முடித்து சித்தியடைந்துள்ள நிலையில், அவர்களுக்காக போதிய ஒய்வு வழங்க வேண்டியது நமது கட்டாய கடமையாகும்.

டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையிலும் அவர்கள் அதிகமாக பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதால் மன உளைச்சல்களுக்கு ஆளாவதாக கல்வியலாளர்கள் எமக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைவாக, டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் ஜனவரி 01ஆம் திகதி வரை தரம் 01 தொடக்கம் உயர்தரம் வரையுள்ள மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் அனைத்தையும் முற்றாக இடைநிறுத்தி, மாணவர்களின் விடுமுறையை சந்தோசமாகக் கழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு சகல பிரத்தியேக வகுப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை அன்பாய்க் கேட்டுக்கொள்வதோடு, பெற்றோர்களும் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

جزاك هللا خيرا

ALM. சபீல் (நளீமி) BA
செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.

Announce of Tution Class leave

LEAVE A REPLY