ராகுல் பதவியேற்பு விழா – சோனியாவின் பேச்சை தடுத்த வெடிச்சத்தம்

0
451

டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ் தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சான்றிதழை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.
201712161409088707_1_rahul1._L_styvpf
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் முக்கிய உயர்மட்ட தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியை வாழ்த்தி சோனியா காந்தி பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனால், சோனியாவின் பேச்சில் இடைஇடையே தடை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சோனியா காந்தி பட்டாசு வெடிப்பதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்று மைக்கில் கூறினார். இருப்பினும், வெடிச் சத்தம் தொடர்ந்தது. எனது குரல் இருக்கும் நிலையில் என்னால் கத்திப் பேச முடியாது. தயவு செய்து பட்டாசு வெடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறிய சோனியா காந்தியை ராகுல் காந்தி சமாதானப்படுத்தினார்.

அவர்கள் வெடித்து முடிக்கும்வரை அமைதியாக காத்திருந்த சோனியா காந்தி பின்னர் தனது பேச்சை தொடர்ந்தார்.

LEAVE A REPLY