கல்முனை சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்

0
156

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள இச்சந்தர்ப்பத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நேற்று (15) வெள்ளிக்கிழமை மாலை கல்முனை ஆசாத் பிலாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றகுமத் மன்சூர், முன்னாள் கல்முனை பிரதேச சபையின் தவிசாளர் சாஹுல் ஹமீட், சட்டத்தரணி ஏ. றோசான் அக்தர், ஏ.பி. ஜெஃபர் ஹாஜியார், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம். பறகதுல்லாஹ், எம்.எஸ்.எம். நிசார் மற்றும் கல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கல்முனை மாநகரத்தின் சமகால அரசியல் தொடர்பிலும் உரையாற்றினார்.

IMG_2105 IMG_2132

LEAVE A REPLY