எதற்காக ஹக்கீமிற்கு நாங்கள் விட்டுக்கொடுப்பினை செய்தோம்? தெளிவு படுத்துகின்றனர் அல்பத்தாஹ் மற்றும் சம்மூன்

0
240

ss(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் செம்மண்ணோடை மாவடிச்சேனை பிரதேசாத வாட்டாரத்திற்கான பிரதி அமைச்சர் அமீர் அலியின் சார்பில் வேட்பாளராக பேசப்பட்டு வந்த சம்மூன் மற்று மாவடிச்சேனை பிரதேசத்திற்கான வேட்பாளராக பேசப்பட்டு வந்த அல்பத்தாஹ் ஆகியோர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமக இருவரையும் சமாதானப்படுத்தி பொது வேட்பாளாராக சமூர்த்தி முகாமையாளர் ஹக்கீம் களமிறக்கபட்டுள்ளார்.

இவ்வாறு பொது வேட்பாளராக சமூர்த்தி முகாமையாளர் செம்மண்ணோடை – மாவடிச்சேனை பிரதேச வட்டாரத்திற்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள விடயத்தினை வைத்து சம்மூனும், அல்பத்தாவும் பணத்தினை பெற்றுகொண்டே இவ்வாறு ஹக்கீமை வேட்பாளராக நியமிப்பதற்கு சம்மத்தித்துள்ளனர் என பிரதேசத்தில் பரவலாக பேசப்படுவது சம்பந்தமாக நேற்று முன்தினம் (14) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவினை தாக்கள் செய்தற்கு பிற்பாடு சம்மூனும், அல்பத்தாவும் சேர்ந்து எதற்காக ஹக்கீமிற்கு நாங்கள் விட்டுக்கொடுப்பினை செய்தோம் என்பதனை மக்களுக்கு தெளிவு படுத்தும் முகமாக ஊடகங்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அல்பத்தாவும் சம்மூனும் தெரிவித்த் கருத்துக்கள் அடக்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY