வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்பாட்டத்திற்கு தடை விதிக்க திருமலை பிரதான நீதவான் ஹம்ஸா மறுப்பு

0
624

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை தலைமயக பொலிஸ் நிலையத்தினால் செய்யப்பட்ட விண்ணப்பத்தின்படி வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்திற்கு முன்னால் அமைதியாக ஆர்ப்பாட்டங்களை செய்யப்போவதாகவும் அந்த ஆர்ப்பாட்டம் எதிர்வருகின்ற காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக மாறுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றினை சமர்ப்பித்தனர்.

இன்று (16) சனிக்கிழமை தேசிய நத்தார் பண்டிகை வைபவத்திற்கு ஜனாதிபதியும் வௌிநாட்டு அதிகாரிகளும் உயரதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர்களுடைய எதிர்பார்ப்பு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதாற்காக அமைதியாக நடாத்தும் ஆர்ப்பாட்டத்தை மக்களுக்கு பங்கம் ஏற்படும் வகையில் பிரதான வீதிகளுக்கு நெறிசல் ஏற்படுத்த எதிர்பார்த்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்திருப்பதினால் இந்த ஆர்ப்பாட்டத்திற்காக தலைமை தாங்கும் முகம்மட் அப்துல் முகம்மட் ராபி என்பவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்ட்டிருந்தது.

அதேவேளை திருகோணமலை நீதவான் பொலிஸாரின் அறிக்கையின் படி இந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் ஆட்பாட்டத்தை செய்ய இருப்பதாக கூறுகின்றார்கள்.

இதேவேளை வேளையில்லா பட்டதாரிகளின் ஆதங்கமும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளையும் சமாதானமான முறையில் முன்வைப்பதில் எந்த தடையுமில்லையெனவும் நீதவான் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அத்துடன் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிற்கும் விதத்தில் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா கட்டளையிட்டார்.

LEAVE A REPLY