“மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லையா?

0
103

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதில் குழப்பம் தொடர்கிறது. இதற்கு, முறையாக கணிப்பதற்கான வழிகாட்டு முறைகள் இல்லாததே காரணம்?

மத்திய – மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு அதிகரிக்க வேண்டுமா? என்று கேட்டு நேயர்கள் தங்கள் கருத்துக்களை “வாதம் விவாதம்” பகுதியில் பதிவு செய்யலாம் என்று பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களில் கேட்டிருந்தோம்.

அவற்றில் நேயர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம். முதலில் ஃபேஸ்புக் நேயர்களின் கருத்துக்களை பார்க்கலாம்.

நான்கு பேராக இந்த கடுமையான புயலில் சிக்கி இருவர் தன்னுடைய கண்முன் இறந்ததை பார்த்தாக எழுதியுள்ள தமிழ்வானன் (Tamil Va Nan), “எந்த எலெக்ட்ரானிக் கருவிகளும் இல்லாமலே கடலின் தன்மையை அறிந்து டன் கணக்கில் சுறா மீன்களை பிடித்து அந்நிய செலாவணியை ஈட்டுபவர்களுக்கு இந்த அரசுகள் ஒரு தனி அமைச்சகம், ஒரு தனித்தொகுதி, ஒரு தனி மீன் வள சட்டம், இதுவரை இயற்றாததது ஏன்??? இனிமேலாவது நடவடிக்கை எடுங்கள்” என்று ஆலோசனை அளித்துள்ளார்.

சக்தி சரவணன் டி என்ற நேயர் கடற்கரையை ஒட்டிய கடற் பயணத்தோடு நில்லாமல் பெருங்கடலின் நடுவே கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி கடற் பயணம் செய்து கிரேக்கம், உரோமம், பாரசீகம், எகிப்து, சீனம், கிழக்கு தீவுகளில் வணிகம் செய்த தமிழர்க்கு மூன்று அரசு (சேர, சோழ, பாண்டிய) வீரர்கள் உள்ளடக்கிய பொதுக் கடற்படையை கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வலிமையான கடற்படை, ராணுவபடை கொண்ட “டிஜிட்டல் இந்தியா”, தொடர்பு எல்லைக்கு உட்பட்ட தொலைவு செல்லும் மீனவர்க்குச் சரியான வானிலை ஆலோசனை வழங்காமலும், புயலில் சிக்கியவரை பத்து நாட்களாகியும் மீட்காமலும் தட்டிக் கழிப்பதன் பின்னால் மீனவரைக் கடற்கரையை விட்டு அப்புறப்படுத்தி பெரும் வணிகத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆயத்தம் செய்வதாகவே தோன்றுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY