மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 41 வேட்புமனுக்கள் தாக்கல்

0
224

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 39 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்றுஇ கோறளைப்பற்று பிரதேச சபை மற்றும் மன்முனைப் பற்று பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வேட்புமனுத்தாக்கல் இன்று (14) வியாழக்கிழமை நண்பகள் 12.00 மணியுடன் நிறைவு பெற்றது.

இதில் 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் கோறளைப்பற்று பிரதேச சபை தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்த தமிழர் விடுhலைக் கூட்டணி மற்றும் ஏறாவூர் நகர சபைக்காக வேட்புமனு செய்த சுயேட்சைக்குழு ஆகிய இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் நகர சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன. இதில் ஒரு சயேட்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுடன் சிரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் இரண்டு வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டன.

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தன.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் இரண்டு வேட்பாளர்கள்pன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சுயேட்சைக்குழுவினது இரண்டு வேட்பாளர்களின் வேட்புமனுக்ள நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று மண்முனைப் பற்று பிரதேச சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தன.

இதில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று பிரதேச சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தன. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஒரு வேட்பாளரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY