கிழக்கு மாகாண ஆளுனரின் அழைப்பில் கிழக்கு மாகாணத்திற்கு இந்திய ஊடகவியலாளர்கள் விஜயம்

0
180

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்த இந்திய ஊடகவியலாளர்களினால் நேற்று (13) மாலை கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தனவிற்கு கௌரவம் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி திட்டங்களையும் மக்களின் பிரச்சினைகளையும் நேரில் சென்று விசாரிப்பதற்காக இந்தியாவை 11 மாநிலங்களைச்சேர்ந்த 28 ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தௌிவூட்டியதையடுத்து இக்கௌரவம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடக செயலாளர் எம்.ஹஸன் அலால்தீன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

DSC_1091

LEAVE A REPLY