(Masha Allah) காத்தான்குடியில் அல்-குர்ஆன் ஓதல் பரீட்சைக்கு தோற்றிய 72 வயது முதியவர்

0
318

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் அல்-குர்ஆன் ஓதல் பரீட்சைக்கு 72 வயது முதியவர் ஒருவர் 13.12.2017 புதன்கிழமையன்று தோற்றியுள்ளார்.

காத்தான்குடி அல்-குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையினால் வருடந்தம் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டு வரும் அல்-குர்ஆன் பரீட்சை இவ்வருடமும் காத்தான்குடியில் இடம் பெற்று வருகின்றது.

இந்தப் பரீட்சை 13.12.2017 புதன்கிழமையன்று காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்ற போது அல்-குர்ஆன் ஓதல் பரீட்சைக்கு காத்தான்குடி ஆறாம் குறிச்சி தாறுஸ்ஸலாம் குர்ஆன் மதரசா சார்பில் காத்தான்குடி தாறுஸ்ஸலாம் வீதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரான ஆதம்லெவ்வை ஹாஜி முகம்மதிபுறாலெவ்வை என்பவர் தோற்றியுள்ளார்.

35 வருடங்களாக ஆயுர்வேத பாரம்பரிய வைத்தியதுறையில் அனுபவமிக்க ஆயுர் வேத வைத்தியரான இவர் அல்-குர்ஆன் ஓதுவதற்கு எனக்கு அதிகம் விருப்பம் எனவும் தான் காத்தான்குடி ஆறாம் குறிச்சி தாறுஸ்ஸலாம் பள்ளிவாயலுக்கு சென்ற போது அங்குள்ள குர்ஆன் மதரசா முஅல்லிம் மௌலவி அல்ஹாபிழ் எம்.எச்.பைறூஸ் பலாஹி என்னை அல்-குர்ஆன் ஓதுவதற்கு தூண்டியதாகவும் அவரின் முயற்சியினாலேயே இந்தப்பரீட்சைக்கு தான் தோற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறிய மாணவர்களே இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். ஆனால் நான் எனது வயது போன காலத்தில் அல்குர்ஆன் பரீட்சைக்கு தோற்ற கிடைத்ததை ஒரு பாக்கியமாக கருதுவதாகவும் தொடர்ந்து எனக்கு அல்குர்ஆன் ஓதுவதே விருப்பமாகும் எனவும் தெரிவித்தார்.

DSC02818 DSC02824

LEAVE A REPLY