கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கிண்ணியா-சல்லிக்கலப்பு பகுதியில் கைது

0
104

bx(அப்துல்சலாம் யாசீம்)

கிண்ணியா சல்லிக்கலப்பு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 48 கிரேம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை நேற்றிரவு (13) 10.00 மணியளவில் இளைஞனொருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச்சேர்ந்த மஹ்ரூப் முகம்மது நியாஸ் (23 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் சுற்றிவளைக்கின்ற நேரத்தில் பல முறை தப்பிச்சென்றுள்ளதாகவும் நேற்றைய தினம் வசமாக மாட்டிக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

sdg

LEAVE A REPLY