கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

0
97

(அப்துல்சலாம் யாசீம்)

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மதீனா நகர் பகுதியில் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (11) இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கஞ்சா போதைப்பொருள் தம் வசம் வைத்திருப்பதாக வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து இச்சந்தேக நபர்களை சோதனையிட்ட வேளை மதீனா நகர் பள்ளி வாயலுக்கு முன்னாள் ஆறு கிரேம் கேரளா கஞ்சாவுடன் அதே இடத்தைச்சேர்ந்த தௌபீக் பிர்தௌஸ் (23வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து 2 கிரேம் கேரளா கஞ்சாவுடன் முகம்மது ரபீக்  ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY