“மூன்றாம் சாமத்து புன்னகை” கவிதை தொகுதி வெளியீட்டு விழா!

0
222

(முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் 9ஆவது வெளியீடான கவிஞர் காத்தநகரான் எம்.ரி.எம்.யூனுஸ் எழுதிய “மூன்றாம் சாமத்து புன்னகை” கவிதைத் தொகுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன், பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் கலந்து சிறப்பித்தார்.

நூலின் முதல் பிரதியினை புரவலர் ஏ.எல்.மீராசாஹிபு பெற்றுக்கொண்டார்.

நூலாசிரியர் அறிமுகத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.றிசாத்தும், நூல் வெளியீட்டுரையை கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலியும் நூல் நயவுரையை முன்னாள் கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராசாவும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயசிறீதர், காத்தான்குடி முன்னாள் நகர முதல்வர் அஸ்பர், மாவட்டத்தின் முக்கிய கவிஞர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

01

LEAVE A REPLY