மக்கா உம்முல் குரா சர்வதேச பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இலங்கையின் சமகால நிலை பற்றிய கலந்துரையாடல்

0
159

மக்கா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட் உம்முல் குரா பல்கலைக்கழக சர்வதேச மாணவர்கள் மத்தியில் தத்தமது நாட்டின் சமகால நிலை பற்றிய கலந்துறையாடல் இன்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

இன்நிகழ்வில் உம்முல் குரா பல்கலைக்கழத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களினால்,

01 – இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறும், தற்கால நிலையும்.
02- இஸ்லாமிய பிரச்சார குழுக்களும், அவைகளின் அழைப்புப் பணியின் வகிபாகங்களும்.
03- இலங்கை முஸ்லிம்களின் தற்போதய கல்வி, கலாசார விழுமியங்களின் நிலை என்பன பேன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இவ்வழைப்பு மையத்தின் சர்வதேச மாணவர்களுக்கான தலைமை அழைப்பாளர் அஷ்சேக் நவ்வாப் ஹையாத் அவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறான முறையில் இலங்கையில் தவ்ஆ பணி அமைய வேண்டும் எனவும், இவ்வாறான வழிகாட்டல் நிகழ்வுகள் எதிகாலத்திலும் நடாத்தப்படும் எனவும் கூறினார்.

தகவல்
ஏ.எம்.எம் அஸ்லம் (இஸ்லாஹி)
(உம்முல் குரா பல்கலைக்கழக வளாகத்திலிருந்து)

01 03

LEAVE A REPLY