பிரதி அமைச்சர் ஹரீஸினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வுகள்

0
251
(அகமட் எஸ். முகைடீன்)
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு,  அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம், நாவிதன்வெளி, காரைதீவு, பொத்துவில் மற்றும் திருக்கோவில் போன்ற பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் குறித்த பிரதேசங்களில் நேற்று (8) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைத்தார்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 9 விளையாட்டுக் கழகங்களுக்கும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 14 விளையாட்டுக் கழகங்களுக்கும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15 விளையாட்டுக் கழகங்களுக்கும், இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15 விளையாட்டுக் கழகங்களுக்கும், நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 விளையாட்டுக் கழகங்களுக்கும், காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 13 விளையாட்டுக் கழகங்களுக்கும், பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 24 விளையாட்டுக் கழகங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

IMG_1833 (1) IMG_1834 (1) IMG_1888 IMG_1938 (1) IMG_1957 (1) IMG_1957 (1) IMG_2002 IMG_2012 IMG_1843 (1) IMG_1870 (2) IMG_1810 (1) IMG_1887 IMG_1942 IMG_1956 (1) IMG_1967 IMG_1970 IMG_2000 (1) IMG_2028 IMG_2051 IMG_2042 IMG_2052 IMG_2064 IMG_2067

LEAVE A REPLY