டெங்கு அபாயத்தைத் தடுத்தல் மற்றும் ஊழியர்களுக்கான உபகரணங்கள் வழங்கல்..

0
214

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான என்.எம்.நௌபீஸ் தலைமையில் இன்று(09) சாரதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஒன்று கூடல் கிண்ணியா நகர சபை அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கழிவுகளை அகற்றுதல், வடிகாண்களைச் சுத்தம் செய்தல் மற்றும் வீதி மிண் விளக்குகளை சரிசெய்தல் ஆகிய விசேட வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை உடனடியாக சரிசெய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் ஆரம்பத்தில் இருந்ததை விட பொதுமக்களின் முறைப்பாடுகள் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாகவும் செயலாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் கழிவுவகற்றல் ஒவ்வொரு வாகனமும் 3 லோட் ஏற்றுகிறதா என்பது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டதுடன், வெள்ளப்பெருக்கினை தடுக்கும் வகையில் தொடந்தேர்ச்சியாக வடிகாண்கள் சுத்தம் செய்யப்படுகின்றதா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அவற்றைச் சுத்தம் செய்யும் போது ஏற்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றதா என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் எதிர்காலத்தில் பொதுமக்களிடம் இருந்து எந்த முறைப்பாடும் வராதவண்ணம் அனைவரும் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் அவசரமான நேரங்களில் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்புன் கடமையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் சேவையின் தேவை கருதி காவலாளிகளுக்கு டோச் லைட் வழங்கப்பட்டதுடன், சாரதிகள் மற்றும் தொழிலாளிகளுக்கு மத்தியரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளப்பட்ட காலணிகள், கையுறைகள் மற்றும் மாஸ்க் என்பனவும் வழங்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் திங்கட் கிழமையில் இருந்து எமது புதிய வீதி திட்டங்களுக்கமைய பிரதான வீதி உட்பட அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக 8 பகுதிகளாக பிரக்கப்பட்ட அடிப்படையில் கிண்ணியா நகரசபைப் பிரிவில் கழிவுகளை அகற்றுவதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வீதி திட்டங்கள் அடுத்த பதிவில் பதிவிடப்படும். அத்துடன் ஒவ்வொரு பிரதான இடங்களிலும் காட்சிப்படுத்தப்படுவதுடன் பள்ளிவாயல்களிலும் அறிவிக்கப்படும். பல வீதிகள் பெயரின்றி உள்ள காரணத்தினால் அவை வீதித்திட்டத்தில் உள்ளடங்காவிடினும் எமது வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டு கழிவகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அடுத்த வார முடிவில் தங்களது பிரதேசங்களுக்கு எமது கழிவகற்றல் அணி வரவில்லையாயின் நேரடியாகவோ 0262236171 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அறிவிப்பதன் மூலம் எமக்கு தெரியப்படுத்தி விடுபட்ட பிரதேசங்களையும் இணைத்துக் கொள்ளலாம் என கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் பொதுமக்களை மேலும் கேட்டுள்ளார்.

FB_IMG_1512817298798 FB_IMG_1512817324295 FB_IMG_1512817317487

LEAVE A REPLY