திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
249

(அகமட் எஸ். முகைடீன்)

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். சாரங்க தலைமையில் இன்று (8) வெள்ளிக்கிழமை சுப்பர் ஸ்டார் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, பிரதேச விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 14 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பிரதி அமைச்சர் ஹரீஸினால் வழங்கிவைக்கப்பட்டது.

கிராமிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கமைவாக இப்பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் கடின பந்து விளையாட்டுக் கழகங்களை உருவாக்கினால் அல்லது தற்போது கடின பந்து விளையாட்டு கழகங்கள் இருக்குமாயின் அவற்றுக்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது உரையாற்றுகையில் தெரிவித்தார்.

IMG_1846 IMG_1859 IMG_1870 IMG_1870 (1) IMG_1876

LEAVE A REPLY