இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலைக் கிளை நிறைவேற்று அதிகாரி டொக்டர் ரவிச்சந்திரன் நடராஜகுரு அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமானார்.

0
178

(அப்துல்சலாம் யாசீம் )

ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதரகத்தின் புலமைப் பரிசில் பெற்று ஆஸ்திரேலியாவின் கேன்ஸ் நகரில் அமைந்துள்ள ஜேம்ஸ் குக் பல்கலைகழகத்தின் பொது சுகாதார வளாகத்தினால் நடாத்தப்படும் ‘அவசர நிலைமைகளின் போது மனிதாபிமான சுகாதார முன்னெடுப்புகள்’ பற்றிய செயற்பட்டறையில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் ஜப்பானின் கியுஷு சர்வதேச பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அவசர நிலைமைகளின் போது அதிக மக்கள் தொகையில் சுகாதார முன்னெடுப்பு கோலாலம்பூரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற அவசர நிலைமைகளின் போது தொற்றுநோய்கள் பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய அனர்த்த பதிலிறுப்பு குழு உறுப்பினர் பயிற்சிஇ நேபால் காட்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய எச்.ஐ.வி எய்ட்ஸ் வலையமைப்பு போன்ற பல
செயற்பட்டறைகளில் கலந்து கொண்ட இவர் தெற்காசிய பிராந்திய சமூகம் சார்ந்த சுகாதார முதலுதவி பயிற்சி வளவாளருமாவார்.

தம்பலகமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் காலம் சென்ற சமாதான நீதவான் அமரர் திரு நடராஜகுரு நேசமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். பிரபல சமூக சேவையாளரான இவர் இலங்கை நீரிழிவு சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினராகவும்இ கொழும்பு ஓசியன் சிட்டி அரிமாக் கழகத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். இலங்கை அரசினால் அகில இலங்கை சமாதான நீதவான் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவருக்கு தேசபந்து விஷ்வகீர்த்தி ஸ்ரீ என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY