மனித உரிமைகள் தினமான இன்று தங்களுடைய உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை

0
284

(அப்துல்சலாம் யாசீம்)

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் 248வது நாளாக இன்று (10) ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டும் தங்களுக்குறிய நீதி மற்றும் உரிமைகள் இதுவரையும் கிடைக்கவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். அத்தினத்தை முன்னிட்டு இன்று (10) கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஏற்பாடுசெய்திருந்த ஊடக சந்திப்பு நடைபெற்ற போதே அச்சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் 248வது நாளாகவும் போராட்டம் செய்யும் கடத்தப்பட்டவர்கள் விடயத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாகவும் ஜனாதிபதியை நான்கு தடவைகள் சந்தித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையெனவும் தாங்கள் இத்தினத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிமைகளை பெற்று தருமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இத்தினத்தில் தங்களுக்கு உரிமைகளையும் நீதியையும் பெற்று தருவோறுக்கு தேர்தலின் போது வாக்களிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

DSC_0073

LEAVE A REPLY