காத்தான்குடி “அல்பாரி பவுண்டேசன்” இனால் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

0
300

காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கிவரும்”அல்பாரி பவுண்டேசன்” கடந்த இரண்டுவருடங்களாக பல்வேறு சமுகப்பணிகளை ஆற்றி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை, புதிய காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பவுண்டேசன் தலைவர் ஜெம்ஸீத் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக நூறாணியா வித்தியாலயத்தில் பல வருடங்களாக அதிபராக கடமையாற்றி பாடசாலையை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்ற ஓய்வுபெற்ற அதிபர் MLA. லெத்தீப் B.A (JP) அவர்கள் கலந்துகொண்டார்கள்.

அவரோடு சேர்த்து நூறாணியா வித்தியாலய இந்நாள் அதிபர் MACM. நியாஸ் , அல்பாரி பவண்டேசன் உறுப்பினர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் விஷேட அம்சமாக பாடசாலைக்கு பல வருடங்கள் சேவையாற்றியமைக்காகவும், புதிய காத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் பல்வேறு கல்விமான்கள் உருவாக காரணமாக இருந்தமைக்காகவும் ஓய்வுபெற்ற அதிபர் MLA. லெத்தீப் B.A (JP) அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் அடையாளம் காணப்பட்ட முப்பது மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான சகல பாடசாலை உபகரணங்களும், மேலும் முப்பதுமாணவர்களுக்கு பாடசாலைப் பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

01 02

LEAVE A REPLY