அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்தின் கெளரவிப்பு நிகழ்வு

0
187

(சப்னி அஹமட், எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்தின் சாதனையாளர்களை பாராட்டி கெளரவம் செய்யும் நிகழ்வு இன்று (06) பாடசாலையின் அதிபர் இதிரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதிகளா அக்கரைப்பற்று வலயக் கல்விப்பனிப்பாளர் ரஹ்மதுல்லாஹ், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் கஸ்ஸாலி உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், 2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும்,இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும், தவணைப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், சிறந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், பாடசாலையின் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்பட்டும் பதவியில் முக்கிய இடத்தில் உள்ள ஆளுமைகளை கெளரவிக்கும் நிகழ்வும், இதன் போது, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடாசாலைக்கான் போட்டோ கொப்பி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

5 8

LEAVE A REPLY