குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி

0
190

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள கல்லூரியில் ஸ்வேதா அகர்வாலா என்ற மாணவி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் பால்டான் பசார் பகுதியில் வசித்து வந்தார்

இந்நிலையில், 2017 12 05 கோவிந்த் சின்கால் என்பவரை சந்திக்க சென்றுள்ளார். நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கோவிந்த் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டு குளியலறையில் ஸ்வேதா பிணமாக கிடந்துள்ளார். இதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கோவிந்த் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். மாணவியின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவிந்த், அவரது தாய் மற்றும் சகோதரியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஸ்வேதா மரணத்திற்கு நியாயம் வேண்டி அவருடன் பயின்ற கல்லூரி மாணவர்கள் பாரலு காவல் நிலையத்தின் முன் கூடி போராட்டம் நடத்தினர்.

ஸ்வேதா 12-ம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY