45 வருடங்களாக கப்று வெட்டும் செய்யது அகமது கௌரவிக்கப்பட்டார்

0
400

Kabr Seyyad Ahamed(விஷேட நிருபர், எம்.ரீ. ஹைதர் அலி, டீன்பைரூஸ்)

மரணமடைகின்றவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக காத்தான்குடியில் கடந்த 45 வருடங்களாக கப்று வெட்டும் ஒருவரை கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் நேற்று (05) செவ்வாய்க்கிழமை இரவு கௌரவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த கச்சிமுகம்மது செய்யது அகமது எனும் இவர் கடந்த 45 வருடங்களாக மரணமடைகின்றவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக கப்று வெட்டி வருகின்றார்.

இவரது சேவையை கௌரவித்து கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அவருக்கு ஒரு புதிய துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார்.

இந்த வைபவம் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.மதீன் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சமூகத்தில் இவ்வாறு சேவையாற்றுபவர்கள் கௌரவிக்கப்படல் வேண்டும். இவர்களுக்கு நம்மால் முடியுமான உதவிகளை வழங்கி அவர்களை கௌரவப்படுத்த வேண்டும்.

இவர் செய்யும் இந்த சேவையானது மிகவும் புனிதமான ஒரு சேவையாகும் என இதன் போது கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

DSC02530

LEAVE A REPLY