மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்க அதிபரிடம் மகஜர் சமர்ப்பிப்பு

0
147

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் புதன்கிழமையும் (06) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். கல்லடிப் பாலத்த்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிவரைச் சென்றனர்.

கச்சேரி நுளைவாயிலை அடைந்து அரசாங்க அதிபரைச் சந்திக்க முற்பட்டனர். அனைவரும் அரசாங்க அதிபரைச் சந்திப்பதற்கு முடியாது குறிப்பிட்ட 5 பேர் மாத்திரம் சந்திக்க முடியும் என பொலிஸார் தெரிவித்ததையடுத்து தமது மகஜரைருடன் 5 பேர் மாத்திரம் அரசாங்க அதிபரைச் சந்தித்து மகஜரைக் கையளித்தனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

01.10.2017 அன்று மாகாணசபையால் நடாத்திய ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளைப் பெற்ற பல பட்டதாரிகள், ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்க்பபடவில்லை.

அரசாங்கம் இவ்வருட (2017) இறுதிக்குள் வழங்குவோம் என வழங்கப்பட்ட வாக்குறுதி (அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் நியமனங்கள்) இதுவரையில் வழங்கப்படவில்லை. ஆண்டு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

இவ்விரண்டு நியமனங்கள் தொடர்பாக கவனத்திற் கொண்டு இவ்வருட இறுத்திக்குள் நியமனங்களை உடனடியாக வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02

LEAVE A REPLY