தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்தியது

0
211

(விஷேட நிருபர்)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக இன்று (06) புதன்கிழமை காலை கட்டுப்பணம் செலுத்தியது.

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாநகர சபை உட்பட மன்முணைப்பற்று பிரதேச சபை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை, வாகரை பிரதேச சபை, செங்கலடி பிரதேச சபை, வவுணதீவு பிரதேச சபை, வெல்லாவெளி பிரதேச சபை, களுவாஞ்சிகுடி பிரதேச சபை, பட்டிப்பளை பிரதேச சபை ஆகிய உள்ளராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளது.
இந்த உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் கட்டுப்பணத்தினை செலுத்தினார்.

கட்சியின் பிரதி தலைவர் கே.யோகவேல் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இதன் போது சமூமகளித்திருந்தனர்.

LEAVE A REPLY