மக்கள் அநாவசியமாக அச்சம் கொள்ளத்தேவையில்லை; முப்படையினரும் அதிகாரிகளும் தயார் நிலையில்

0
138

அரச அதிகாரிகளுடான அவசரக் கலந்துரையாடலில் மட்டு அரச அதிபர் தெரிவிப்பு

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் அனர்த்தம் ஒன்று ஏற்படுமாயின் மக்களை பாதுகாக்கும் வகையில் முப்படையினரும் அதிகாரிகளும் தயாராக இருக்கின்றனர். மக்கள் எந்த வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (5.12.2017) மாலை நடைபெற்ற அரச அதிகாரிகளுடான அவசரக் கலந்துரையாடலின் போதே மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த், மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராசா மற்றும் அன்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் உட்பட திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் அரசாங்க அதிகாரிகள் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் அனர்த்தம் ஒன்று ஏற்படுமாயின் மக்களை பாதுகாக்கும் வகையில் முப்படையினரும் அதிகாரிகளும் தயாராக இருக்கின்றனர். மக்கள் எந்த வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை

அனைத்து அறிவுறுத்தல்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் அநாவசியமாக அச்சம் கொள்ளத்தேவையில்லை. இது தொடர்பில் அதிகாரிகள் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் வழங்குவார்கள்.

அனர்த்தம் தொடர்பில் கிடைக்கும் தகவல்களை பொது மக்களுக்கு அவ்வப் போது வழங்கப்படும் அந்த அறிவுறுத்தலுக்கு ஏற்பட மக்கள் செயற்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் அனர்த்தம் ஒன்று ஏற்படுமாயின் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் நாம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணத்தினால் கடல் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள அமுக்கம் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தமது மீன்பிடி தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .

அதேவேளை கரையோர பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கும் இது தொடர்பாக தகவல்கள் பிரதேச செயலக அதிகாரிகள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY