அழுகிய நிலையில் விற்பனைக்காக மரக்கறிகள்

0
89

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு சித்தாண்டி வாரந்த சந்தையில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த ஒரு தொகுதி மரக்கறிகளை வியாழக்கிழமை 07.12.2017 கைப்பற்றியுள்ளதாக சித்தாண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சி.சிவகாந்தன் தெரிவித்தார்.

பாவனையாளர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து வாரந்த சந்தை நடைபெறும் பகுதியை பரிசோதகர்களான சி.சிவகாந்தன் மற்றும் அ.ராஜ்குமார் ஆகியோர் நடத்திய சுற்றிவளைப்பின்போது அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கோவா 30 கிலோகிறம், கரட் 50 கிலோகிறம், கத்தரிக்காய் 15 கிலோகிறம் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மரக்கறிகளை நாளை (08) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிழமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

PHI (3)

LEAVE A REPLY