பட்டதாரிகள் கல்லடி பாலத்தில் ஆர்ப்பாட்டம்

0
460

(ஜுனைட் எம்.பஹ்த்)

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தும் இதுவரை நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் இணைந்து இன்று (06) மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் நின்று உடனடியாக நியமனம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மேற்படி இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் ” மத்திய அரசே நியமனம் வழங்கு…!! “,” கிழக்கு மாகாண அரசே உடனடியாக நியமனம் வழங்கு” போன்ற கோசங்கள் எழுப்பியதுடன்..

“போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தும் இன்றும் இன்றும் வீதியில்…இதுதான் நல்லாட்சியா?”, ” அரசியல்வாதிகளே!! சிந்தியுங்கள்.. இன்று நாம் தெருவில்.. நாளை நீங்கள் தெருவில்?” ,” அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நீதி வேண்டும்” என்று எழுதிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

02

LEAVE A REPLY