உதவிகளைப் பெற்று குடும்ப வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் ஆர். நெடுஞ்செழியன்

0
186

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அரசாங்கத்தால் செயற்படுத்துகிற திட்டங்களுடன் இணைந்து கொண்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதோடு பங்களிப்பினை வழங்கி உங்களுடைய குடும்ப வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் பொருளாதார வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் 102 பயனாளிகளுக்கு 4.8 மில்லியன் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் திங்களன்று இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த காலங்களை விடவும் இந்த வருடத்தில் வறுமை குறைந்திருக்கிறது. 11.3 வீதமாக உள்ளதென தற்போதைய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த அடிப்படையில் இதுவரையில் நாங்கள் பல்வேறு நிதி மூலங்களின் மூலம் வாழ்வாதார உதவித்திட்டங்களை வழங்கியுள்ள அதேவேளை, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் மூலம் 95 மில்லியன் ரூபாவை இவ்வாறான வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.

இது தவிர தேசிய ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக 100 மில்லின் ரூபா பெறுமதியான நிதியின் மூலம் வாழ்வாதர உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

எனவே 200 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார வேலைத்திட்டங்கள் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே இத்திட்டங்;களின் ஊடாக இப் பிரதேசத்தினுடைய வறுமையை தணித்து மக்களுடைய வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை களநிலை உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் கௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். முரளிதரன், பட்டிப்பளை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான எம். குணரெட்ணம், கே. பிரபாகரன், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதே வேளை, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களது அமைச்சின் ஊடாக இவ்வருடத்தில் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல், வீதிப்புனரமைப்பு, மற்றும் குளங்களின் புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களையும் பார்வையிட்டனர்.

_DSC5340 _DSC5376 _DSC5371 _DSC5390 _DSC5389

LEAVE A REPLY