55 தாதியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு..

0
344

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிதாக 55 தாதியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு (04) நேற்று மாலை மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்றதுடன் கிழக்கு மாகாணத்தில் தாதியர் பற்றாக்குறையாக காணப்படுகின்ற வைத்தியசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றவர்களை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நியமனம் பெற்ற தாதியர்கள் மத்தியில் உரையாற்றிய மாகாண பணிப்பாளர் நியமனம் பெற்றதையடுத்து வீட்டுப்பிரச்சினை -உறவினர்களுக்கு சுகயீனம் மற்றும் தூரம் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை கூறி
இடமாற்றம் கேட்க வேண்டாம் எனவும் குறைந்தது இரண்டு வருடமாவது நியமிக்கப்பட்ட இடத்தில் கடமையாற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிர்வான உத்தியோகத்தர் -பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் நியமனம் பெறுபவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

DSC_0550 DSC_0583

LEAVE A REPLY