வெவ்வேறு சுற்றிவலைப்பில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

0
184

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூரில் நேற்று(04) மாலை 450 கிராம் கேரளா கஞ்சாவை தன்வசம் வைத்திருந்ததன் குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இல:08,பாலத்தோப்பூர் எனும் முகவரியைச் சேர்ந்த வயது(36) குடும்பஸ்தர் ஒருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் அவரது வீட்டில் வைத்து சோதனைக்குட்படுத்தியபோது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை கேரளா கஞ்சாவுடன் மூதூர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றொருவர் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் பழைய வைத்தியசாலை சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்னால் இன்று(04) 05 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியாவைச் சேர்ந்த வயது (42) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனையிட்டபோது தன்வசம் கேரளா கஞ்சா வைத்திருந்ததன் குற்றசாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் நாளை(05) ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

unnamed unnamed unnamed

LEAVE A REPLY