இன்னும் இறுதி தீர்மானம் இல்லை: அமைச்ச்சர் ஹக்கீம் காத்தான்குடியில் தெரிவிப்பு

0
319

(விஷேட நிருபர்)

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து காத்தான்குடியில் நடை பெற்ற சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் காத்தான்குடி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு (03) காத்தான்குடியில் இச் சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் றஊப் ஹக்கீம் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் இன்னும் எந்தவொரு இறுதி தீர்மானமும் எடுக்கப்பட வில்லை.

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில உள்ளராட்சி மன்றங்களில் தனித்தும் இன்னும் சில உள்ளுராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனைகள் இடம் பெற்று வருகின்றன.

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என சிலர் கூறுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.முபீன் மற்றும் காத்தான்குடி நகர சபை முன்னாள் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியடுவது குறித்தும் அதற்கான வேட்பாளர் தெரிவு குறித்தும் இதன் போது ஆராயப்பட்டதுடன் மண்முனை பற்று பிரதேச சபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்றும் இதன் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.முபீன் மற்றும் காத்தான்குடி நகர சபை முன்னாள் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் மற்றும் சாந்தி முகைதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY