மக்களை ஏமாற்றும் வாக்குறுதி நாடகம் அம்பாறையில்

0
365

ஜெமீல் அகமட்

தேர்தல் காலம் வந்தால் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மக்கள் மத்தியில் பொய் வாக்குறுதி கொடுப்பது வழக்கம்

கடந்த தேர்தல்களில் ஹக்கிம் கொடுத்த பொய் வாக்குறுதிகள்

1) சாய்ந்தமருது மக்கள் மயிலுக்கு ஆதாரவாக இருந்த நிலையில் அவர்களின் வாக்கை பெறுவதற்கு ரனிலை கல்முனைக்கு கூட்டி வந்து மக்கள் மத்தியில் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை என்று கூறியதுடன் கல்முனை மக்களின் வாக்கை பெற கல்முனை நகர அபிவிருத்தி என்று பொய் வாக்குறுதி கூறியது

2) அட்டாளைச்சேனை மக்களின் வாக்கை பெற தேசியப்பட்டியல் என்று பொய் வாக்குறுதி கூறியது

3) அக்கறைப்பற்று மக்களின் வாக்கை பெற அக்கறைப்பற்றுக்கு அரசியல் அதிகாரம் என்று பொய் வாக்குறுதி அதனால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை பெறலாம் என நினைத்து ஏமாற்றம் அடைந்தார் ஹக்கிமின் தம்பி தவம் இப்படி கடந்த காலங்களில் ஹக்கிம் சமுதாயத்தை ஏமாற்றிய சரித்திரங்கள் வரலாறாக இருக்கின்றன இவைகளை பற்றி சிறிதளவும் சிந்தித்து கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் பொய் வாக்குறுதி என்பது ஹக்கிமுக்கு வாய் கண்ட கலை அதனால் அவர் திருந்தவும்மாட்டார் பொய் வாக்குறுதியை மக்கள் இனி நம்பமாட்டார்கள்

கடந்த கால தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடையும் நிலையில் இருக்கும் பிரதேசங்களுக்கு ஹக்கிம் சென்று கொத்துக் குண்டாக பொய் வாக்குறுதியை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி வெற்றி கொள்வார் அதற்கு பணத்துக்கு வாக்களிக்கும் மடையர்களும் உதவி புரிந்துள்ளனர் அதனால்தான் ஹக்கிம் டயஸ்போராவோடு இனைந்து வட கிழக்கை இனைக்க கனவு காண்கின்றார் அது நடக்காது

தற்போது நாட்டில் உள்ளூராச்சி தேர்தல் நடைபெறவுள்ளது அதில் ஹக்கிம் ரூசி கண்ட அம்பாறை மாவட்டத்தில் இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியடைந்து கடந்த காலத்தில் ஆட்சி செய்த பிரதேச சபைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம் போய் விடும் நிலை காணப்படுகின்றன அதிலும் இது வரை முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக இருந்த நிந்தவூரில் அரசியல் நிலவரம் தழை கீழாக மாறியுள்ளது அங்கு அமைச்சர் றிசாத் அலை வீசுகின்றது அதனால் எதிர் வரும் தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் #இழப்பது உறுதியாகி விட்டது என்பதை நாடி பிடித்து அறிந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிந்தவூர் மக்களின் மனதை திசை திருப்பி வெற்றி கொள்ள அஸ்ரப் கலாச்சார மண்டபம் கட்டி விரைவில் திறப்பு விழா என்ற பொய் வாக்குறுதியை வழங்கியுள்ளார் அதை நம்பி ஹக்கிம் தலைமை கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நிந்தவூர் மக்கள் ஆதரிக்க அவர்கள் ஒன்றும் அறியாத மடையர்கள் அல்ல

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது கையால் அடிக்கல் வைத்த நிந்தவூர் கலாச்சார கட்டிடம் கட்டி முடிவதற்குள் அஸ்ரப் அவர்கள் மரணத்து விட்டார்
அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை ஏற்றுக்கொண்ட ஹக்கிம் 17 வருடமாக தலைவர் அஸ்ரப் அவர்களின் கையால் அடிக்கல் வைத்த கட்டிடத்தை கட்டி முடிக்க விரும்பாத ஹக்கிம் இன்று மிகவும் ஆர்வத்துடன்( 03/12/2017)ஓடி வந்து கலாச்சார மண்டபத்தை கட்டி முடிக்க முன் வந்து இருப்பதன் மர்மம் என்ன ? என்று சிந்தித்தால் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் நிந்தவூர் மண்ணில் தோல்வியடைகிறது என்பது உறுதியாகி விட்டது என்றுதான் கூற வேண்டும்

தலைவர் அஸ்ரப் அவர்களின் கொள்கையில் கட்சியை வழி நடத்துவது என்றால் ஹக்கிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்றுக்கொண்ட மறுநாளே தலைவர் அஸ்ரப் அவர்கள் அடிக்கல் வைத்த கட்டிடத்தை கட்டி முடிக்க முயற்சி செய்து இருக்க வேண்டும் அதை செய்யாமல் அஸ்ரப் அவர்களின் அரசியலை புறந்தள்ளி அவருக்கு இது வரை துரோகம் செய்து அரசியல் வியாபாரம் செய்து சொகுசா வாழ மக்கள் முன் கொடுக்கும் பொய் வாக்குறுதிகளால் இனிமேல் தேர்தலில் வெற்றி பெற முடியாது

கலாச்சாரத்தை வைத்து வாக்கை பெறலாம் என நினைத்தால் அஸ்ரப் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற கலாச்சார மண்டபத்தை தற்போதைய நிலைக்கு கட்டி முடிக்க உதவிய முன்னால் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி அவர்களின் ஆதரவாளர்களுக்கு உரிமையுன்டு தவிர ஹக்கிமுக்கு இல்லை

அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஏக்கர் காணியை மீட்டுக்கொடுக்காதவர் வட்டமடு காணியை மீட்டுக்கொடுக்க போயுள்ளார் இந்த நாடகம் எல்லாம் அக்கறைபற்று #சாரதா #தியேட்டரில் மக்கள் பார்த்து இரசித்த படம்

தொழுது விட்டு சத்தியம் செய்து சத்தியத்தை மீறியவர் பொதுவாக அல்லாஹ்வை ஏமாற்ற நினைத்தரை அல்லாஹ் எதிர் வரும் தேர்தலில் ஏமாற்றம் செய்ய போகிறார் நாம் அல்லாஹ்வுக்கு சுக்ரன் சொல்ல வேண்டும்

எனவே கடந்த காலங்களை போன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிம் கூறும் பொய் வாக்குறுதியை நம்பி வாக்களிக்க அம்பாறை மக்கள் ஹக்கிம் கூறுவது போல் மட்டையனுகள் (மடையர்கள்)அல்ல என்பதை எதிர் வரும் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் காங்கிரஸ் வேற்பாளர்கள் தங்களது காதில் கேட்க கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

LEAVE A REPLY