பதவியை தவறாக பயன்படுத்தினாரா இஸ்ரேல் பிரதமர்? – விசாரணை கோரி 20 ஆயிரம் பேர் போராட்டம்

0
514

யூதர்களின் நாடான இஸ்ரேலின் அதிபராக இருப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்த நிலையில், நேற்று திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

நேதன்யாகு குற்ற விசாரனையை எதிர்கொள்ளும் பட்சத்தில், அது அவருடைய கழுத்தின் மேல் தொங்கும் கத்தியாகவே இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY