இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டெர் பதவியேற்ப்பு

0
57

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் ரிச்சர்ட் வர்மா. இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கு கென்னத் ஜஸ்டெரின் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார்.

கென்னத் ஜஸ்டெர், கடந்த ஜூன் மாதம் வரை டிரம்பின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் துணை உதவியாளராகவும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராகவும் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக கடந்த 2001 முதல் 2005ம் ஆண்டுவரை, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் வணிக செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். இந்தியாவிற்கான அமெரிக்கா தூதராக கென்னத் ஜெஸ்டெர் செயல்படுவதை அந்நாட்டு செனட் சபை உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கென்னத் ஜெஸ்டெர் தேர்வு செய்யப்பட்டது குறித்து குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவு துறை தொடர்பான குழுவினர் ஜெஸ்டருக்கு தங்கள் ஆதரவை அளித்தனர். இதையடுத்து, இந்தியாவிற்கான புதிய தூதராக கென்னத் ஜெஸ்டர் செயல்படுவது உறுதியாகி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் பதவியேற்றார். கென்னத் விரைவில் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக காம்ளக்சின் ரூசிவெல்ட் வீட்டில் வந்து குடியேற உள்ளார். கென்னத்திற்கு தலைவர்கள் அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY