இராணுவ ட்ரக் வண்டி கொத்மலை பலாகொல்ல பகுதியில் விபத்து 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

0
345

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட பலாகொல்ல பகுதியில் இரானுவ ட்ரக் வண்டியொன்று 13.11.2017 பகல் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 11 பேர் காயங்களுக்குள்ளாகி கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 11 பேரில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கண்டி பகுதியிலிருந்து பயிற்சிக்காக தியத்தலாவ பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இடது பக்கம் உள்ள பாரிய வளைவினை திருப்பும் போது மீண்டும் திருப்புவதற்கு முடியாமல் போனமையில் டரக் வண்டி கீழே பாய்ந்து விழுந்துள்ளது.

DSC09571 DSC09567

LEAVE A REPLY