கிழக்கின் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் விவகாரத்தில் ஜனாதிபதியிடம் கதைத்து தீர்வு பெற்றுத தருவதாகக் கூறி ஏமாற்றிய சுபைர் போன்றோரால் சமூகத்துக்கு என்ன பிரயோசனம் எம் லாஹிர் கேள்வி

0
196

கிழக்கின் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் வௌிமாகாணத்திற்கு நியமிக்கப்பட்டு அவர்கள் தீர்வுக்காக அரசியல்வாதிகளை நாடிய போது ஜனாதிபதியிடம் கதைத்துஅவர்களுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுபைர் போன்றோரால் இந்த சமூகத்துக்கு எவ்வித பிரயோசனமுமில்லை என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம் லாஹிர் தெரிவித்தார்

எமது மாகாண கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற போது அதில் ஒருவரைக் கூட கிழக்கில் மீள நியமிக்க முடியாத கௌரவ முன்னாள் உறுப்பினர் சுபைர் போன்றோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் என சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்திரணி லாஹிர் கூறினார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தவறான முன்னுதாரணத்தைக் காட்டியுள்ளதாகமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுபைர் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சட்டத்தரணி லாஹிர் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்,

தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி லாஹிர்,
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் எமது ஆசிரியர்கள் வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற போது தேசியக் கல்வியமைச்சுடன் போராடி அவர்களை சொந்த மாகாணத்தில் நியமித்ததுதான் முன்னாள் முதலமைச்சரின் தவறான முன்னுதாரணமா???

அவ்வாறாயின் உங்களைப் போல போலி அறிக்கைகளை ஊடகங்களுக்கு கொடுத்து விட்டு எந்த முயற்சியும் செய்யாமல் மக்களை ஏமாற்றுவது தான் சரியான முன்னுதாரணமா???

அல்லது கிழக்கின் பட்டதாரிகள் வீதிகளில் இறங்கி நூறு நாட்களுக்கும் மேல் மழையிலும் வெயிலிலும் போராடுகின்ற போது அவர்களுடன் இணைந்து புகைப்படங்களுக்கு முகம் காட்டி ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வு பெற்றுத் தருவதாக அவர்களை ஏமாற்றியது சரியானமுன்னுதாரணமா??

இல்லை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கதைத்து 1700 பட்டதாரிகளுக்கான நியமனங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 259 பேருக்கு நியமனம் வழங்கியது தவறான முன்னுதாரணமா???

நீங்கள் மாகாண சுகாதார அமைச்சராக இருந்தும் உங்களால் அபிவிருத்தி செய்ய முடியாது போன ஏறாவூர் வைத்தியசாலைக்கு பல கோடி ரூபா நிதியொதுக்கி அபிவிருத்திகளை முன்னெடுத்த முன்னாள் முதலமைச்சர் செய்ததது தவறான முன்னுதாரணமா???

ஆகவே உங்களின் முன்னுதாரணங்களையும் முன்னாள் முதலமைச்சரின்முன்னுதாரணங்களையும் மக்கள் நன்கு அறிவார்கள்,அவர்களுக்குத் தெரியும் யாருடைய முன்னுதாரணம் பிழையானது என்று,

நீங்கள் கிழக்கு மாகாண சபை 20ஆம் திருத்தத்தை ஆதரித்து சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக கூறுகின்றீர்கள்.
20 ஆம்திருத்த்தில் சமூகத்துக்கு பாதிப்பான எந்த விடயம் உள்ளடங்கியிருக்கின்றது என்று உங்களால் கூற முடியுமா???
எந்தத் திருத்தம் சமூகத்துக்கு பாதிப்பானது என்பதைக் கூட சரியாக உணர்ந்து கொள்ள முடியாத உங்களைப் போன்றவர்களை தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் மக்கள் வெட்கப்பட வேண்டும்,

மாகாண சபைத்திருத்தம் தான் எம் சமூகத்துக்கும் மிகவும் பாதகமான திருத்தம் ,அதனை உங்கள் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடனேயே நிறைவேறியது,அவ்வாறு இருக்க அந்தக் கட்சியின் அமைப்பாளர் பதவியையும் சுபைர் பொறுப்பெடுக்கின்றார் என்றால் அவரின் சமூகப்பற்று எவ்வாறானது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்,

ஆகவே உங்கள்முன்னுதாரணங்களையும் முன்னாள் முதலமைச்சரின் முன்னுதாரணங்களையும் மக்கள் நன்கறிவார்கள் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி லாஹிர் கூறினார்.

LEAVE A REPLY