ஏறாவூர் பிரதேச பொது நிறுவனங்களுக்கு பொருட்கள் கையளிப்பு

0
186

(எம்.ஜே.எம்.சஜீத்)

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினதும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரினதும் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் ஏறாவூர் பிரதேச பொது நிறுவனங்களுக்கு நேற்று (13) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு பொருட்களை கையளித்தனர்.

ஏறாவூர் பிரதேச பள்ளிவாயல்கள், இமாம்கள், ஹதீப்மார் சம்மேளனம், சமூக சேவை அமைப்பு, விளையாட்டு கழகங்கள், போன்றவற்றுக்கே இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன. குறிப்பாக இதில் ஒலிபெருக்கி சாதனங்கள், தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொருட்களை வழங்கிவைத்த அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுபைர் ஆகியோருக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY