கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைகளின் புதிய செயலாளர்கள் நியமனம்

0
394

(எம்.ரீ. ஹைதர் அலி)

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு  ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று வடக்கு  வாகரை இரு பிரதேச சபைகளுக்குமான புதிய செயலாளர்கள் (14) (இன்று) உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கோறளைப்பற்று மேற்கு  ஓட்டமாவடி, பிரதேச சபையின் செயலாளராக எம்.எச்.எம். ஹமீம் அவர்களும் கோறளைப்பற்று வடக்கு  வாகரை பிரதேச சபையின் செயலாளராக ஜே. சர்வேஸ்வரன் அவர்களும் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதற்கு முன்னர் எம்.எச்.எம். ஹமீம் ஏறாவூர் நகர சபையின் செயலாளராகவும், ஜே. சர்வேஸ்வரன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

இருவரும் தங்களது காலங்களில் எதுவிதமான பாகுபாடுகளுமின்றி திறன்பட பிரதேச சபைகளை சிறந்த முறையில் வழிநடாத்தி மக்களுக்கான சேவைகளை வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் மக்களுக்காற்றிய சேவைகள் பெரிதும் போற்றக்கூடியதாகும்.

SDW_8911 SDW_8913

LEAVE A REPLY