சவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

0
508

(வாழைசசேனை நிருபர்)

மட்டக்களப்பு சவுக்கடி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கக் கோரியும், அவர்களுக்கு ஒருபோதும் பிணை வழங்குதல் கூடாது எனவும், அவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் ஆறுமுகத்தான் குடியிருப்பு, சவுக்கடி பிரதேச பொது மக்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்துறையே கொலையாளிகளுக்குத் தண்டனை வழங்கு, சட்டத்தரணிகளே கொலையாளிகள் சார்பில் ஆஜராக வேண்டாம், நீதி தேவதையே கண்விழி, காவற்துறையே கொலையாளிகளைப் பிடித்ததது போல் அவர்களுக்கு விரைவாகத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க மேலும் உதவுங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC_0269DSC_0288 DSC_0282 DSC_0275 DSC_0335

எறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில் கடந்த மாதம் 18ம் திகதி தாய் மற்றும் மகன் இருவர் கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_0260 DSC_0267 DSC_0273

LEAVE A REPLY