பெரும்பாலான பள்ளிவாயல்களின் கட்டுமானப் பணிகள் எமது நாட்டிலுள்ளவர்களின் நிதி பங்களிப்பினூடாகவே கட்டப்பட்டுள்ளது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

0
203

(எம்.ரீ. ஹைதர் அலி)

காத்தான்குடியின் பிரதான பள்ளிவாயல்கள் பல எவ்வித வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் அனுசரணையின்றியே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி செய்யத் செயின் மௌலானா பள்ளிவாயலுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 2017.11.11ஆந்திகதி நடைபெற்றது.

DSC_4897

இந்நிகல்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயல், ஜாமியுள் ஆபிரீன் பள்ளிவாயல், பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயல் போன்ற பல பெரும் பள்ளிவாயல்கள் எவ்வித வெளிநாட்டு நிதி உதவிகளுமின்றி எமது நாட்டினைச் சேர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்புடனையே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தற்போது நடைபெற்றுவரும் இப்பள்ளிவாயளினுடைய அபிவிருத்திப் பணிகளும் இறைவனின் உதவியோடு சிறந்த விதத்தில் முடிவுறுத்தப்படும் என்ற நம்பிக்கையுள்ளதோடு அதற்கென எங்களாலான அனைத்து விதமான உதவிகளையும், அதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

இப்பள்ளிவாயலானது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உள்ளிட்ட பல முக்கிய பொறியியலாளர்களின் ஆலோசனைக்கமைவாக நிலக்கீழ் வாகனத் தரிப்பிட வசதியுடன் கூடியதாக நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

DSC_4918DSC_4919

LEAVE A REPLY