மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் உட்பட சில பிரதேச சபைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம்

0
549

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் உட்பட சில பிரதேச சபைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபையின் செயலாளராக மட்டக்களப்பு மாநகர சபையின் செயலாளராக கடமையாற்றிய திருமதி எம்.ஆர்.பாத்திமா றிப்கா இடமாற்றப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.எம்.ஸபி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய எம்.எச்.எம்.ஹமீம் ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவி செயலாளராக கடமையாற்றிய எம்.நௌபீஸ் ஏறாவூர் நகர சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய ஜே.சர்வேஸ்வரன் வாகரை பிரதேச சபையின் செயலாளராகவும் வாகரை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.இந்திரகுமார் கல்குடா வலய அலுவலகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.எம்.சகாப்தீன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கும் மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய திணேஸ்குமார் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் உத்தரவின் பேரில் கிழக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதி பிரதம செயலாளர் திருமதி ஜே.பி.முரளிதரன் அவர்களினால் இந்த இடமாற்றக் கடிதங்கள் இவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த இடமாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடம் பெற்றுள்ளன.

மேற்படி காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் செயலாளர்களாக இலங்கை நிர்வாக சேவை தரத்திரலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY